• Apr 22 2026

13வது நாளிலும் பட்டையை கிளப்பும் LIK..! மொத்த வசூல் இத்தனை கோடியா.??

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி  திரைப்படம் தற்போது திரையரங்குகளில் மிதமான வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி  படத்தின் 13வது நாள் வசூல் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியாவில் மட்டும் நிகர வசூல் ரூ.38.83 கோடியாகவும், மொத்த வசூல் ரூ.44.83 கோடியாகவும் பதிவாகியுள்ளது. வெளிநாட்டு சந்தைகளில் ரூ.11.10 கோடி வசூல் கிடைத்துள்ளதாம்.

தினசரி வசூல் நிலவரத்தில், 11வது நாளான கடந்த திங்கட்கிழமை ரூ.64 லட்சமும், 12வது நாளான செவ்வாய்க்கிழமை ரூ.63 லட்சமும் வசூலாகியுள்ளது.  

இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை அனிருத் அமைத்துள்ளார்.


இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்ற போதும்  இரண்டாம் பாதியில் உள்ள நகைச்சுவை ரசிகர்களை கவர்ந்துள்ளதாகவும், எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு சிறப்பாக இருப்பதாகவும் பாராட்டுகள் கிடைத்துள்ளன. 

அதே நேரத்தில் கதை மற்றும் சில நடிப்புகள் சாதாரணமாக உள்ளதாகவும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. மொத்தத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் சராசரி வெற்றியை நோக்கி நகர்ந்து வருவதாக சினிமா வட்டாரங்கள் மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement