• Apr 17 2026

விரைவினில் வந்து கலந்திடு.. ரசிகர்களை ஜோசிக்க வைத்த VJ பார்வதியின் வீடியோ.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

யூடியூப் உலகில் பிராங்க் ஷோக்கள் மூலம் தன்னுடைய தனித்துவமான பேச்சு மற்றும் தைரியமான அணுகுமுறையால் கவனம் ஈர்த்தவர் வி.ஜே. பார்வதி. பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று சுவாரஸ்யமான கேள்விகள் கேட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் குறுகிய காலத்திலேயே இணைய உலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.


யூடியூப்பைத் தொடர்ந்து, Cooku with Comali நிகழ்ச்சியில் கலந்து கொண்டது வி.ஜே. பார்வதிக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சமையலும், கலகலப்பான காமெடியும் கலந்த இந்த நிகழ்ச்சியில் அவர் வெளிப்படுத்திய நகைச்சுவை உணர்வு மற்றும் இயல்பான அணுகுமுறை ரசிகர்களின் மனதை வென்றது. 

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, சமூக வலைத்தளங்களில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. அத்துடன், பல்வேறு நிகழ்ச்சிகளிலும், சிறப்பு பேட்டிகளிலும் அவர் பங்கேற்று தனது கேரியரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார்.

அதனைத் தொடர்ந்து, Bigg Boss நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் வி.ஜே. பார்வதி. பெரும் எதிர்பார்ப்புகளுடன் அவர் வீட்டிற்குள் சென்றிருந்தார். ஆரம்பத்திலேயே தன்னம்பிக்கை மற்றும் திறமையான பேச்சுத் திறனால் கவனம் ஈர்த்தார். ஆனால் நிகழ்ச்சியின் போக்கில் ஏற்பட்ட சில சர்ச்சைகள் காரணமாக, அவர் ரெட் கார்ட் பெற்று வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.


பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, வி.ஜே. பார்வதி சமூக வலைத்தளங்களில் மேலும் ஆக்டிவாகி வந்தார். இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற தளங்களில் அடிக்கடி புகைப்படங்களும் வீடியோக்களும் பகிர்ந்து வருகிறார். 

இந்நிலையில், தற்போது வி.ஜே. பார்வதி வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அவர் மாறுபட்ட லுக்கில் காட்சியளிக்கிறார். 



Advertisement

Advertisement