• Jul 19 2025

முதல் நாள் வசூல் வந்தாச்சு! நம்பவே முடியல.. பாக்ஸ் ஆபிஸை அசத்திய கண்ணப்பா.!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் தான் "கண்ணப்பா". நடிகர் விஷ்ணு மஞ்சு நடிப்பில், இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், நேற்றைய தினம் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டது.


நாத்திகனாக வாழ்க்கையை தொடங்கும் ஒரு சாதாரண மனிதன், பின்னர் சிவபக்தியாக மாறி, இறைவனுக்கு தனது கண்களை அர்ப்பணிக்கும் அளவுக்குத் தீவிரமான பக்தியைக் காட்டும் கதைதான் கண்ணப்பா. இது ஒரு வரலாற்று புராணக்கதை அல்ல; இது உணர்வுகள், பக்தி ஆகியவற்றின் ஒளியோட்டம்.


இதில் விஷ்ணு மஞ்சு, கண்ணப்பர் எனும் பாத்திரத்தில் தனது முழு திறமையையும் காட்டியிருந்தார். அத்துடன், பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், சரத்குமார், காஜல் அகர்வால், என இந்திய திரைத்துறையின் மிகப்பெரிய நட்சத்திரங்களும் இதில் நடித்திருந்தனர்.

அத்தகைய படம் தற்பொழுது உலகளவில் ரூ.15 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகவல் வெளியானதை அடுத்து ரசிகர்களும் படக்குழுவினரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement

Advertisement