• Apr 18 2026

மகனை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்! டைட்டிலே காப்பி அடிச்சு வச்சுருக்கீங்களே? வெளியாகிய போஸ்டர்!

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆக்சன் திரைப்படங்கள் , காதல் திரைப்படங்கள் , கமர்சியல் திரைப்படங்கள் மட்டும் இன்றி கிராமத்து கதைக்களத்தை கொண்ட திரைப்படங்களுக்கென்றும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அவ்வாறே கிராமத்து படங்களில் கலக்கும் இயக்குனர் முத்தையாவின் அடுத்த பட அப்டேட் வெளியாகி உள்ளது.


பொதுவாகவே கிராமத்து கதைக்களத்தில் அருமையான திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் முத்தையா ஆவார். குட்டிப்புலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய இவர் கார்த்தியை வைத்து இயக்கிய கொம்பன் திரைப்படத்தின் மூலமே பெரிதும் அறியப்பட்டார். 


சமீபத்தில் இவர் இயக்கிய விருமன் திரைப்படம் பெரிதும் பேசப்படாத நிலையில் அடுத்ததாக தனது மகனான விஜய் முத்தையாவை வைத்து சுள்ளான் சேது என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகின்றார். குறித்த படத்தை kkr சினிமாஸ் தயாரிப்பதோடு , நடிகர் பரத் வில்லனாகவும் நடிக்கின்றார். குறித்த படத்தின் பெயர் தனுஷ் நடித்த சுள்ளான் , விக்ரம் நடித்த சேது ஆகிய பட பெயர்களின் கலவையாக உள்ளது என விமர்சித்தும் வருகின்றனர்.


Advertisement

Advertisement