• May 16 2026

விஜய் - மீனாட்சி காம்பினேஷனில் ஒரு டூயட்.. ஒரு பாடலுக்கு இத்தனை கோடி செலவா?

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்து வரும்கோட்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வரும் நிலையில் தற்போது விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி நடிக்கும் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பாடல் காட்சி பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரமாண்டமான செட், நூற்றுக்கணக்கான டான்ஸர்கள் மற்றும் விலை உயர்ந்த காஸ்டியூம்கள் என இந்த ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் சுமார் பத்து கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த பாடல் காட்சி படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் விஜய் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலை பாடி வரும் நிலையில்கோட்படத்திலும் ஒரு பாடலை பாடியுள்ளதாக சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா கூறிய நிலையில் இந்த பாடலை தான் அவர் பாடியுள்ளார் என்றும் தெரிகிறது.

வழக்கம்போல் நடனத்தில் விஜய் இந்த பாடலில் அசத்துவார் என்றும்வாரிசுதிரைப்படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடலுக்கு இணையாக இந்த படத்தில் ஒரு நீளமான ஒரே ஷாட் நடனமும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த பாடல் படப்பிடிப்பு முடிந்தவுடன் விஜய் உட்பட படக்குழுவினர் ரஷ்யா செல்வதாகவும் அங்கு 20 நாள் படப்பிடிப்பு நடத்த உள்ளதாகவும் ஒரு சேசிங் காட்சி மற்றும் ஒரு பாடல் காட்சி ஆகியவை படமாக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து திருவனந்தபுரம் கிரிக்கெட் மைதானத்தில் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட உள்ளதாகவும் அத்துடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது.

விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி, கனிகா  என ஏராளமான நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.  வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

Advertisement

Advertisement