• May 23 2025

டிடிஎஃப் வாசனை விடாது துரத்தும் துன்பங்கள் ,கடைக்கும் காவல்துறை நோட்டீஸ்!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் நாட்டின் மோட்டோ வுளொக் யூ டியூபரான  டிடிஎஃப் வாசன் 4.5 மில்லியன் போலாவர்களை கொண்ட பிரபலமாவர்.குறிப்பாக 90 கிட்ஸ்களுக்கு டிடிஎஃப் வாசன் யார் என்று தெரியாது என்றாலும் 2கே கிட்ஸ்களுக்கு அவர் மிகப் பிரபலம் என்றே சொல்ல வேண்டும்.தற்போது மஞ்சள் வீரன் எனும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த வருடம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றை முந்தி செல்ல முயன்ற போது  ஏற்பட்ட விபத்தில் இவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.இந்த விபத்து தொடர்பாக போலீசார் அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர், மேலும், போக்குவரத்துத்துறை அவரது லைசென்ஸ் உரிமையை 10 வருடத்திற்கு ரத்து செய்தது. 


இந்நிலையில் சென்னை அயப்பாக்கத்தில் உள்ள  டிடிஎஃப் வாசனின் இருசக்கர வாகன கடைக்கு போக்குவரத்து காவல்துறை நோட்டீஸ் அளித்துள்ளது.அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்சர்களை விற்பனை செய்ததாக எழுந்த புகாரில் அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். டிடிஎஃப் வாசனின் கடைக்கு சென்று ஆய்வு செய்த போலீசார் மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தினர்.

Advertisement

Advertisement