• May 16 2026

திடீரென அந்தமான் தீவுக்கு செல்லும் சூர்யா.. 40 நாட்கள் என்ன செய்ய போகிறார்?

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா திடீரென அந்தமான் தீவுக்கு செல்லப் போவதாகவும் அங்கு அவர் 40 நாட்கள் தங்கி இருக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.. 

நடிகர் சூர்யா சமீபத்தில் 'கங்குவா’ என்ற படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் சூர்யாவின் 44 வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின் படி  'சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரம் அதாவது ஜூன் 2-ம் தேதி தொடங்க இருப்பதாகவும், முதல் கட்ட படப்பிடிப்பு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக மே மாத இறுதியில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் உள்பட படக்குழுவினர் அந்தமான் செல்ல இருப்பதாகவும் அங்கு 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

சூர்யாவின் அட்டகாசமான அறிமுக பாடல், சில காமெடி காட்சிகள் மற்றும் ஒரு ஸ்டண்ட் காட்சிகள் அங்கு படமாக்கப்பட இருப்பதாகவும் இதனை அடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க்கவுள்ளார்.


Advertisement

Advertisement