• Apr 18 2026

பிரமிக்க வைக்கும் ‘கங்குவா’ படத்தின் டீசர்.. மிரட்டும் சூர்யா நடிப்பு..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தை பெரும் பொருட்செலவில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது 

ஆனால் சில நிமிடங்கள் தாமதமாக சற்று முன் இந்த டீசர் வெளியாகி உள்ளதை அடுத்து இந்த டீசர் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் மத்தியில் அட்டகாசமான போர் காட்சிகள், அதிரடி ஆக்சன் காட்சிகள் என பிரமிக்க வைக்கும் ஏராளமான காட்சிகள் இந்த டீசரில் உள்ளது என்பதும் இந்த டீசர் வெறும் 51 வினாடிகள் மட்டுமே இருந்தாலும் மலைக்க வைக்க அளவுக்கு இந்த டீசரில் உள்ள காட்சிகள் இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

குறிப்பாக சூர்யாவை இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் பார்க்கலாம் என்பது இந்த டீசரின் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் சிறுத்தை சிவா வேற லெவலில் இந்த படத்தை இயக்கியிருப்பதாகவும் அதே போல் பின்னணி இசை அமைத்துள்ள தேவி ஸ்ரீ பிரசாத் அவர்களிடம் சரியாக வேலை வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மொத்தத்தில் இந்த டீசரை பார்க்கும்போதே இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் பாபி தியோல் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் இந்த படம் 10 மொழிகளில் உலகம் முழுவதும் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement