• Apr 21 2026

வாக்குசாவடியில் திருப்பி அனுப்பப்பட்ட சூரி ! ஓட்டுப்போடாமல் மனவேதனையாய் இருக்கிறது!

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

சமீப்பத்தில் இந்தியாவில் மக்களவை தேர்தல் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. மக்கள் வாக்களிப்பதை தவர்ப்பதன் காரணமாக பல சினிமா பிரபலங்களும் விழிப்புணர்வுக்காக நேரில் சென்று வாக்களிக்கின்றனர். 


வாக்கு பதிவு செய்யும் மக்கலின் பெயர் வாக்கு பதிவில் விடுபடுவது ஒவ்வொரு தேர்தலுக்கும் நடைபெறும் ஒன்றே ஆகும். ஆனால் இம்முறை முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சூரியின் பெயர் விடுபட்டுள்ளதால அவர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்றப்பட்டுள்ளது. 


இதனை உருக்கத்துடன் வீடியோவாக வெளியிட்டுள்ளார் சூரி அவர் கூறுகையில் " எனது ஜனநாயக உரிமையை செலுத்த இங்கு வந்தேன்.எல்லா தேர்தலிலும் எனது வாக்கை போடுகிறேன் ஆனால் இந்த முறை எனது பெயர் விடுபட்டுள்ளது என்கிறார்கள் . எனது மனைவி மாத்திரமே வாக்களித்துள்ளார் ஆனால் நான் வாக்களிக்க முடியவில்லை இது மனவேதனையாய் உள்ளது. எல்லோரும் ஓட்டுபோட்டுவிட்டு சொல்லுவார்கள் நான் போடாமல் சொல்லுகிறேன் எல்லோரும் 100 வீத வாக்கை அளியுங்கள்." 


Advertisement

Advertisement