• May 16 2026

ஒரே நேரத்தில் 2 சீரியலில் இருந்து விலகும் நடிகை? விஜய் டிவி என்ன செய்ய போகிறது?

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நடிகை ஒருவர் திடீரென இரண்டு சீரியலில் இருந்தும் விலகப் போவதாகவும் எனவே விஜய் டிவி அவருக்கு பதிலாக இரண்டு புதிய நடிகைகளை தேர்வு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று ’மோதலும் காதலும்’. இந்த சீரியலில் ஸ்ரீதேவி அசோக் ’நந்தினி’ என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் அவர் இந்த சீரியலில் இருந்து விலகப் போகிறார் என்று தெரிகிறது.

தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் ’மோதலும் காதலும்’ சீரியலில் இருந்து விலகப் போவதாகவும் அவருக்கு பதிலாக நடிகை கிருத்திகா என்பவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கிருத்திகா  ஏற்கனவே ’தென்றல் வந்து என்னை தொடும்’ என்ற சீரியலில் நடித்த நிலையில் தற்போது ’மோதலும் காதலும்’ சீரியலில் நந்தினி கேரக்டரில் நடிக்க உள்ளார் என்று தெரிகிறது.



மேலும் ஸ்ரீதேவி அசோக் டெலிவரி ஆகி சில மாதங்கள் கழித்து மீண்டும் அதே கேரக்டரை ஏற்றுக்கொள்வார் என்றும், அதுவரை தற்காலிகமாக தான் நந்தினி கேரக்டரில் கிருத்திகா நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது.

அதேபோல் ஸ்ரீதேவி அசோக் நடித்துக் கொண்டிருக்கும் இன்னொரு சீரியல்  ’பொன்னி’ என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சீரியலில் இருந்தும் ஸ்ரீதேவி அசோக் விலகுவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி இந்த சீரியலில் இருந்து அவர் விலகவில்லை என்றும் அவரது கேரக்டர் சில நாட்களுக்கு இந்த சீரியலில் வராது என்றும் அவர் குழந்தை பெற்று திரும்ப வந்தவுடன் அவரது கேரக்டர் திரும்பவும் வரும் வகையில் கதை மாற்றி அமைக்க போவதாகவும் கூறப்படுகிறது.

எனவே விஜய் டிவியில் இரண்டு சீரியலில் ஸ்ரீதேவி அசோக் நடித்துக் கொண்டிருந்தாலும் இப்போதைக்கு ’மோதலும் காதலும்’ சீரியலில் இருந்து மட்டும் விலகப் போவதாகவும் இன்னொரு சீரியலில் அவர் சில வாரங்கள் கழித்து தொடர இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement