• May 15 2026

’விடுதலை 2’ படத்தை முந்திவிட்ட சூரியின் இன்னொரு படம்.. ஆனாலும் வெற்றிமாறனுக்கு சந்தோஷம் தான்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

சூரி நடித்த ’விடுதலை 2’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்க்கொண்டே இருக்கும் நிலையில் அதற்கு முன்பு சூரி ஹீரோவாக நடித்த இன்னொரு படம் ரிலீஸ் தகவல் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கும் வெற்றிமாறன் தான் கதை வசனம் என்பதால் அவர் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிகிறது.

வெற்றிமாறன் கதை வசனத்தில். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வந்த ’கருடன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்து சில வாரங்களுக்கு முன் முடிவடைந்தது என்பதை பார்த்தோம். இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் இந்த படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன் சூரி தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் இந்த படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’விடுதலை 2’ படம் தான் முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு முன்பே ’கருடன்’ படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இரண்டு படங்களும் வெற்றிமாறன் படம் தான் என்பதால் அவருக்கு அந்த வகையில் சந்தோசம் தான்.

சசிகுமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் ’கருடன்’ திரைப்படத்தில் சசிகுமார் விசுவாசியாக சூரி நடித்துள்ளார் என்பதும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி மாதம் இந்த படத்தின் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலானது என்பதும் அந்த வீடியோ இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

’கருடன்’ திரைப்படம் மே மாதம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டாலும் ரிலீஸ் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ரோஷினி ஹரிப்பிரியன், சமுத்திரகனி, மைம் கோபி,  மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.  

Advertisement

Advertisement