• May 16 2026

பாம்பு டான்சில் கலக்கும் நடிகை! வைரலாக ரித்திகா சிங் வீடியோ இதோ !

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

"டார்ஸான் தி பேர்டி" என்ற ஹிந்தி திரைப்பதின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங் ஆவார்.தொடர்ந்து மலையாளம் ,கன்னடம் , தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வரும் இவர் பெரிதும் அறியப்பட்டது தமிழ் சினிமாவின் மூலமே ஆகும்.


தமிழ் சினிமாவில் சுதா கொங்காரா பிரசாந்த் இயக்கத்தில் மாதவன் நடித்து ஹிட் கொடுத்த திரைப்படம் "இறுதிச்சுற்று" ஆகும். குறித்த திரைப்படத்தில் பாக்சிங் செய்யும் பெண் கதாபாத்திரத்தில் அருமையான நடிப்பை இவர் வெளிப்படுத்தி இருந்தார். இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பிற்காக பல விருதுகளை பெற்றிருந்தார் குறிப்பாக தேசிய விருதையும் பெற்றுள்ளார்.


இந்த நிலையிலேயே சமீபத்தில் திரைப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கவர்ச்சி புகைப்படங்களையும் பல வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றார். அவ்வாறே இவர் சமீபத்தில் பகிர்ந்த வீடியோ காணொளியானது வைரலாகி வருகின்றது. ஆங்கில பாடல் ஒன்றுக்கு பாம்பு போன்று வளைந்து நெளிந்து ஆடும் குறித்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement