தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராஜேஷ் .இவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் திரைத்துறையினர் மத்தியிலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இன்றய தினம் அவரது மகள் வெளிநாட்டில் இருந்து வந்து தந்தையில் உடலை கண்டு அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில் அவரது மகளுக்கு நடிகர் சிவகுமார் ஆறுதல் சொல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
90S கால கட்டத்தில் முன்னணி நடிகராகவும்,சீரியல்கள்,நிகழ்ச்சிகள் என்பவற்றின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றுள்ளார். இவரது இறந்த செய்தி கேட்டு ரசிகர்கள் ,பிரபலங்கள் அவரது உடலை பார்வையிட்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்க வருகைதந்திருந்தனர். அது மட்டுமல்லாமல் அவர் தங்களுடன் எவ்வாறு நடந்து கொண்டார் என பலர் தங்களுடைய நினைவுகளை பதிவிட்டு இருந்தனர். இதனை தொடர்ந்து அவரது இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் சிவகுமார் வருகை தந்து அவரது உடலை கண்டவுடன் சிறிது நேரம் மௌனமாக நின்று விட்டார். பின் அவரது மகன் மற்றும் மகளுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
இவரது இறப்பும் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் இவரது இறுதி சடங்குகள் இன்றைய தினம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ரசிகர்களும் பிரபலங்களும் அவரது இல்லத்திற்கு வருகை தந்து உடலுக்கு அஞ்சலி செய்து கொண்டிருக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்கள் வைரலாகி வருகின்றது.
Listen News!