ஜி தமிழ் சரிகமப Li’l Champs சீசன் 4 பைனல் நேற்று மிகவும் செம அட்டகாசமாக நடைபெற்றது. இதில் ஆர்யா, சிவகார்த்திகேயன் மற்றும் சந்தானம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விழாவை பரபரப்பாக நடத்தினார்கள். இந்த இறுதிப்போட்டியில் 6 போட்டியாளர்கள் கடுமையாக போட்டியிட்டு அதில் திவினேஷ் டைட்டில் வின்னர் ஆனார்.
சிவகார்த்திகேயன் திவினேஷுக்கு பரிசு வழங்கும் அளவுக்கு மகிழ்ச்சி அடைந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் யோகஸ்ரீ இரண்டாம் இடத்தைப் பிடித்தார் மற்றும் ஹேமித்ரா மூன்றாம் இடத்தை வென்றார். அந்த பைனல் நிகழ்வின் போது சிவகார்த்திகேயன் மற்றும் திவினேஷ் இணைந்து எம்.ஜி.ஆரின் "நான் ஆணையிட்டால்" பாடலை பாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர்.
இந்த சிறப்பு அரங்கேற்றம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.இந்த வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அதற்கு பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
😍😍♥️♥️ pic.twitter.com/nenvUjmS6O
Listen News!