• Aug 05 2025

‘சீதா ராமம்’ திரைப்படம் மூன்று ஆண்டு நிறைவு...!ரசிகர்களின் மனங்களில் வாழும் காதல் காவியம்!

Roshika / 3 hours ago

Advertisement

Listen News!

துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாகூர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த ‘சீதா ராமம்’ திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 5) தனது 3வது ஆண்டை எட்டியுள்ளது. காதல், கருணை, நாட்டுப்பற்று என அனைத்தையும் ஒரே திரைப்படத்தில் கவிதையாக சொல்லிய சிறப்பான கலைப்படைப்பு இது.


ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், காதலால் தொடங்கியும் கடிதங்களால் இணைந்தும், தியாகத்தால் உயிர்த்தெழும் ஒரு காதல் கதையை சொல்லியது. துல்கர் சல்மானும், மிருணாள் தாகூரும் இடையே இருந்த நெஞ்சை வருடும் கேமிஸ்ட்ரி, ரசிகர்களை கோட்டை (Roja) படத்தின் நாட்களில் மீண்டும் அழைத்துச் சென்றது.


கடிதத்தின் வழியே விரிந்த காதல், வீரனின் வலிமை, பிரிவின் வலி, மறுபடியும் சந்திக்கும் நம்பிக்கை – இவை அனைத்தும் ரசிகர்களை செம்மையுடன் கதையில் இழுத்துச் சென்றன. தெலுங்கில் தொடங்கி, தமிழ், மலையாளம்,  ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகி, உலகம் முழுவதும் 97 கோடி வசூலித்த இந்த படம், துல்கர் சல்மானின் திரைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.


மிருணாள் தாகூரின் தெலுங்கு அறிமுகமே இந்த படமாகும். ஆனால், ஒரே படத்தில் ‘சீதா மஹாலக்ஷ்மி’ என பூரணமாக மனதில் பதிந்தார். வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், விஷால் சந்திரசேகர் இசையும் படத்தின் உணர்வுகளை இரட்டித்தன.

Advertisement

Advertisement