பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, செந்தில் பாண்டியன் கிட்ட பொலிஸ் கம்பிளைன்ட் கொடுத்திடலாம் என்கிறார். அதுக்கு பாண்டியன் குடும்ப பிரச்சனைக்கு பொலிஸ் ஸ்டேஷன் போய் நிக்கலாமா என்று கேட்கிறார். அதனை அடுத்து சரவணன் பாண்டியனைப் பார்த்து நீங்க எனக்கு நல்லது தான் நினைச்சிங்க அதனால என்னை நினைத்து கவலைப்பட வேண்டாம் என்கிறார்.

மேலும், ரொம்ப நாளைக்குப் பிறகு இப்பதான் நிம்மதியா இருக்கன் அவள் எனக்கு வேணாம் டிவோர்ஸ் வாங்கிக் கொடுங்க என்கிறார் சரவணன். அதைக் கேட்ட கதிர் எடுக்கிற முடிவை கொஞ்சம் ஜோசிச்சு நிதானமா எடு அவசரப்படாத என்கிறார். பின் செந்தில் யாருடைய பேச்சையோ கேட்டு கல்யாணம் பண்ணி இப்ப இப்புடி கஷ்டப்பட வேண்டி இருக்கு என்கிறார்.
அதைக் கேட்ட கோமதி நாங்கள் ஒன்னும் வேணும் என்று பண்ணல அவன் நல்லா இருக்கணும் என்று தான் செய்தனாங்க என்கிறார். இதைத் தொடர்ந்து செந்தில் பாண்டியனைப் பார்த்து நான் பார்த்து கல்யாணம் செய்திருந்தால் நல்லா இருந்திருப்பாங்க இவங்களா கல்யாணம் செய்தால் வாழ்க்கை இப்புடித் தான் போகும் என்று எங்களுக்கு சாபம் போட்டார் இப்ப என்ன நடக்குது என்று கேட்கிறார்.

மறுபக்கம், மயில் சரவணனை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த பாக்கியம் எந்த வீட்டில இருந்து மயிலை அனுப்பினாங்களோ அவங்களையே திரும்ப கூப்பிட வைக்கிறன் என்கிறார். பின் மீனா செந்திலைப் பார்த்து அப்பா ஒரு தப்பு செய்திட்டார் என்ற சந்தோசத்தில திரியுறீங்க என்கிறார். அதனை அடுத்து மயில் மீனாவுக்கு போன் எடுத்து கவலைப்படுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!