• Apr 16 2026

மக்களுக்கு நல்லது செய்ய அரசியல் அவசியம் இல்ல... கன்னட நடிகர் சிவராஜ்குமார் பகீர்.!

shali / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தற்பொழுது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். 


சமீபத்தில் நடைபெற்ற ‘45’ திரைப்படத்தின் நிகழ்ச்சியில் அவர் பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளன.

தமிழகத்தில் நடிகர் விஜய் உள்ளிட்ட சில நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சிவராஜ்குமார், “மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. நடிகராக இருந்து கொண்டே சமூகத்திற்கு நல்லது செய்ய முடியும். அதற்கு அதிகாரம் அவசியமில்லை.” என்று கூறினார்.


தமிழக அரசியல் வரலாற்றில் நடிகர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முதல் சமீப காலத்தில் கமல்ஹாசன் வரை பலர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்துள்ளனர். தற்போது நடிகர் விஜய் தனது அரசியல் கட்சி அறிவிப்புக்குப் பிறகு, அவரது அரசியல் பயணம் குறித்து பரவலான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில் சிவராஜ்குமார் தெரிவித்த கருத்து, அரசியலுக்கு வருவதற்கு அதிகாரம் தேவையில்லை என்ற கருத்தினை முன்வைக்கின்றது. 

Advertisement

Advertisement