• Apr 16 2026

சமந்தா கூட செல்ஃபி எடுக்கணும்.! முண்டியடித்த ரசிகர்களால் பரபரப்பு

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக திகழும் நடிகை சமந்தா, இயக்குனர் ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகைச் சார்ந்தவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். 

இவர்களுடைய திருமணம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், சமந்தா மனப்பூர்வமான  சந்தோஷத்துடன் ஜொலிக்கும் புகைப்படங்கள் அத்தனையையும் தவிடு பொடியாக்கியது. 

ஏற்கனவே நாக சைதன்யாவுடன் விவாகரத்தில் முடிந்த திருமணம்,  நோய் பாதிப்பு, வலுவிழந்த உடல் என அத்தனையும் தாண்டி தனியோரு பெண்ணாக கடந்து வந்தவர் சமந்தா. தற்போது அவருடைய வாழ்க்கை ஏற்பட்ட மாற்றம் பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது. 

இதைத் தொடர்ந்து  ஹைதராபாத்தில் கடை ஒன்றின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சமந்தா அணிந்திருந்த புடவை பலருடைய கவனத்தையும் ஈர்த்தது.. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.


இந்த நிலையில், குறித்த கடை திறப்பு விழாவுக்கு சென்ற சமந்தாவிடம் செல்பி எடுக்க ரசிகர்கள் முண்டியடித்துள்ளனர். இதனால்  அந்த இடம் சற்று பரபரப்பாக காணப்பட்டுள்ளது. 

ஒரு வழியாக பாதுகாவலர்கள், ரசிகர்களை அப்புறப்படுத்தி சமந்தாவை  வழி அனுப்பி வைத்துள்ளனர்.  தற்போது இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.



 

Advertisement

Advertisement