• Apr 16 2026

வசூலில் அடித்து நொறுக்கும் சலார் திரைப்படம்- மூன்றாம் நாளில் பெற்ற வசூல் எத்தனை கோடி தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2 நாட்களுக்கு முதல் வெளியாகிய திரைப்படம் தான் சலார். இப் படத்தின் முதல் பாகம் நல்லாவே இல்லை என்றும் அந்த படத்தின் கதை ரொம்பவே சொதப்பலாக உள்ளதாக ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பியவாறு இருக்கின்றது.

பிரம்மாண்டமான கதையம்சம் கொண்ட படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கிய நிலையில், படத்தை மக்கள் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்துடன் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். 


 முதல் நாளில் பிரபாஸின் சலார் திரைப்படம் 178.5 கோடி ரூபாயை வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் இரண்டாம் நாள் 250 கோடி தான் வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்களை குறைவான தொகையை சுட்டிக் காட்டிய நிலையில், தற்போது அதெல்லாம் கிடையாது. 


2ம் நாள் வசூல் 295.5 கோடி ரூபாய் என தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 300 கோடி ரூபாய்க்கு வெறும் 4.5 கோடி தான் குறைவு.ஞாயிற்றுக்கிழமையான இன்றைய வசூல் உடன் சேர்த்தால் 450 கோடி ரூபாயை சலார் படம் தாண்டி விடும் என்றே தெரிகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறையுடன் ஜெயிலர் மற்றும் லியோ வசூலை அடித்து நொறுக்கிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement