• Apr 16 2026

சூர்யாவுடன் நடிக்க மறுத்த ராஷ்மிகா மந்தனா. இந்த ஒரே ஒரு காரணம் தான்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

சூர்யாவின் அடுத்த படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனாவை படக்குழுவினர் தொடர்பு கொண்ட போது அவர் மிகப்பெரிய தொகை கேட்டதாகவும் அதிலிருந்து ஒரு ரூபாய் குறைத்தால் கூட நடிக்க முடியாது என்று கூறியதாகவும் கசிந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா நடிப்பில் தற்போதுகங்குவாஎன்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்ததாக அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும்சூர்யா 43’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் நாயகி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் ராஷ்மிகா மந்தனா நடிக்க தொடர்பு கொள்ளப்பட்டதாகவும் அவர் 3 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.



கார்த்தி நடித்தசுல்தான்திரைப்படத்தில் ஒரு சில லட்சங்கள் மட்டும் சம்பளம் வாங்கிய ராஷ்மிகா மந்தனா, விஜய்யின்வாரிசுபடத்தில் நடிக்கும் போது கூட ஒரு கோடிக்கும் குறைவாகத்தான் சம்பளம் வாங்கினார். ஆனால் சமீபத்தில் அவர் நடித்தஅனிமல்என்ற ஹிந்தி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் தனது சம்பளத்தை 3 கோடி முதல் 5 கோடி வரை அதிகரித்து விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் தான் சூர்யா, சுதா கொங்கரா படத்திற்கு மூன்று கோடி சம்பளம் கேட்டதாகவும் அதற்கு குறைந்து தன்னால் நடிக்க முடியாது என்று கறாராக கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்தசூர்யா 43’  பட குழுவினர் ராஷ்மிகா மந்தனா படத்திற்கே தேவை இல்லை என்று கூறிவிட்டு புதுமுக நடிகையை தேடி வருவதாகவும் ஒரு சில லட்சங்களில் புதுமுக நடிகைக்கு சம்பளம் கொடுத்தால் போதும் என்று முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது

Advertisement

Advertisement