• Jun 28 2025

மீண்டும் இணையும் ரஜினி - கார்த்திக் சுப்புராஜ்.. தயாராகிறது ‘பேட்ட 2’.. ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’பேட்ட’ திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நிலையில் மீண்டும் ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி இணைய இருப்பதாகவும் இந்த படம் ’பேட்ட’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜய் நடிக்கும் ’தளபதி 69’ படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் அதன்பின்னர் சூர்யா நடிக்கும் ’சூர்யா 44 ’படத்தை தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்த கார்த்திக் சுப்புராஜ் ஒன்லைன் கதை கூறியதாகவும் அந்த கதை ரஜினிகாந்த்துக்கு பிடித்து விட்டதை அடுத்து படப்பிடிப்பை கண்டிப்பாக விரைவில் தொடங்கலாம் என்று உறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஜினிக்கு அவர் சொன்ன கதை ’பேட்ட 2’ கதை என்றும் தெரிகிறது.

ரஜினிகாந்த் அடுத்த மாதம் முதல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கூலி’ திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் அவர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு ட்விஸ்ட்டாக  ஐஸ்வர்யா ராய் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் ’எந்திரன்’ படத்துக்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்த் - ஐஸ்வர்யா ராய் இணையும் படமாக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement