• May 16 2026

35 வயது முரட்டு சிங்கிள்.. ராய் லட்சுமியின் பிறந்த நாள் கொண்டாட்டம்..

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ராய் லட்சுமி சமீபத்தில் தனது 35 வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ஒரு சில பாலிவுட் படங்களில் நடித்தவர் நடிகை ராய் லட்சுமி. இவர் தமிழில் ’குண்டக்க மண்டக்க’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் விஜயகாந்த் நடித்த ’தர்மபுரி’ பிரகாஷ்ராஜ் நடித்த ’வெள்ளித்திரை’ ஜெயம் ரவி நடித்த ’தாம் தூம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். அஜித் நடித்த ’மங்காத்தா’ விக்ரம் நடித்த ’தாண்டவ’ம் ஆகிய படங்களில் அவரது கேரக்டர் சூப்பராக இருக்கும்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இவர் ஒரு பாடலுக்கு மட்டுமே நடனம் ஆடி வருகிறார் என்பதும் பட வாய்ப்புகள் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் ராய் லட்சுமிக்கு 7 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அதில் அவர் கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வரும் நிலையில் லைக்ஸ் அள்ளுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு நட்சத்திர ஓட்டலில் பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் டான்ஸ் ஆடிக்கொண்டே அவர் கேக் வெட்டிய புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி  வரும் நிலையில் அவருக்கு ஏராளமானோர் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ராய் லட்சுமிக்கு 35 வயதாகியும் இன்னும் அவர் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement