• Apr 17 2026

லூசான உடை அணிந்தால் உடனே கர்ப்பமா? காட்டமாக பதிலளித்த பிரபல நடிகை..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரி பரினிதி     சோப்ரா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் அவர் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரி பரினிதி   சோப்ராவும் ஒரு நடிகை தான் என்பதும் அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் பல படங்களில் நடித்து வருகிறார்.  தற்போது கூட ஒரு பாலிவுட் படத்தில் வருகிறார் என்பதும், அதுமட்டுமின்றி அவர் ஏராளமான தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார் என்பதும் பலர் அறிந்ததே. 

இந்த நிலையில் பரினிதி     சோப்ரா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ராகவ் சத்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணம் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 



இந்த நிலையில் தற்போது அவர் லூசான ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே சென்ற நிலையில் அவரது ஆடையை பார்த்து பலர் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறி வருகின்றனர். 

இதற்கு பதிலடி கொடுத்த பரினிதி     சோப்ரா  லூசான ஆடைகளை அணிந்தால் போதும் உடனே கர்ப்பம் என்று கதையை கிளப்பி விடுவார்கள், நான் கர்ப்பமாக இல்லை, கர்ப்பமாக இருந்தால் கண்டிப்பாக தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் பெரிய உடை அணிந்தால் கர்ப்பம், பெரிய சட்டை அணிந்தால் கர்ப்பம், இந்தியன் குர்கா அணிந்தால் கர்ப்பம் என கிளப்பி விடுவதை எப்போது தான் நிறுத்தப் போகிறார்கள் என்றும் அவர் காமெடியாக பதிவு செய்துள்ளார்.  

Advertisement

Advertisement