• Apr 18 2026

விஜயாவுக்கு சரியான செருப்படி கொடுத்த முத்து, செம சந்தோசத்தில் இருக்கும் மீனா-சுவாரஸியமான Siragadikka Aasai Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், முத்து மீனாவிடம் என்ன சாப்பாடு செய்தாய் என்று கேட்க ஸ்ருதிக்கு சிக்கன் சூப் பண்ணினேன். அத்தைக்கும் மாமாவுக்கும் கீரை கடைஞ்சு வைச்சிருக்கிறேன்.ரவிக்கும் உங்க அண்ணனுக்கும் சப்பாத்தியும் சிக்கன் கிரேவியும் பண்ணி வைச்சிருக்கிறேன் என்கின்றார்.

அதைக் கேட்ட முத்து உனக்கு என்ன பண்ணி இருக்கிற என்று கேட்க வேலை பண்ணி இருக்கிறேன் என்று சொல்கின்றார். தொடர்ந்து முத்து கடைக்குச் சென்று தந்துாரிச் சிக்கன் வாங்கிக் கொண்டு வந்து மீனாவுக்கு சாப்பிடக் கொடுக்கின்றார்.இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement