• Apr 26 2025

சுதாகரின் சதித்திட்டத்தால் மனமுடைந்த பாக்கியா...! கேள்விக்குறியாகும் இனியாவின் வாழ்க்கை..!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, செழியன் இனியாவப் பாத்து இந்தக் கலியாணத்தால உன்னோட வாழ்க்கை நல்லா இருக்கும் என்று சொல்லுறார். மேலும் ஜெனியைப் பாத்து வா வீட்ட போகலாம் என்கிறார். அதைக் கேட்ட இனியா நீங்க போக வேணாம் எனக்குப் பயமா இருக்கு என்று சொல்லுறார். அதுக்கு ஜெனி உன்ன எங்கயும் தனியா விட்டுட்டுப் போகல நீ வாழப்போற வீட்ட தான் விட்டுட்டுப் போறோம் என்று சொல்லுறார்.

இதனை அடுத்து செழியன் எப்ப உன்னப் பாக்கோணும் என்று தோணினாலும் வந்திருவோம் என்று சொல்லுறார். நிதீஷ் இனியா அழுகுறதைப் பாத்து நான் பாத்துக்கிறேன் என்று செழியனிடம் சொல்லுறார். அதைத் தொடர்ந்து சுதாகர் இனியா, இனிமேல் நம்ம வீட்டுப் பொண்ணு என்கிறார். மேலும் சொந்தப் பொண்ணு மாதிரி நாங்க பாத்துக்கிறோம் என்று சொல்லுறார்.


இதனை அடுத்து செல்வி ஆகாஷை கோச்சிங் கிளாஸில போய் படிக்கச் சொல்லுறார். அதுக்கு ஆகாஷ் அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை நான் வீட்டில இருந்தே படிக்கிறேன் என்கிறார். அதைக் கேட்ட செல்வி அங்க படிச்ச நிறையப் பேருக்கு கவர்மெண்ட் வேலை கிடைச்சிருக்கு அதுதான் உன்னையும் அங்க படிக்கச் சொல்லுறேன் என்கிறார். மேலும் வேலைக்காரி மகன் என்று குத்திக் காட்டின எல்லாருக்கும் நீ கலெக்டர் ஆகிக் காட்ட வேணும் என்று ஆகாஷைப் பாத்துச் சொல்லுறார்.

மறுநாள் சுதாகர் ரெஸ்டாரெண்டுக்கு வந்து பாக்கியாவப் பாத்து அதுதான் கலியாணம் முடிஞ்சிருச்சு எல்லோ இனியும் ஏன் சார் என்று கூப்பிடுறீங்க என்று கேக்கிறார். மேலும் பத்திரத்தைப் படிச்சுப் பாக்குறீங்களா என்று கேக்கிறார். அந்தப் பத்திரத்தைப் பாத்த பாக்கியா இது ரொம்பவே தப்பா இருக்கு என்று சொல்லுறார். இதனை அடுத்து சுதாகர் இந்த ரெஸ்டாரெண்ட இனியாவுக்கு கிப்டா கொடுத்திட்டீங்க என்றதுடன் இனிமேல் உங்களுக்கும் இந்த ரெஸ்டாரெண்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement