• Apr 17 2026

லேடி சூப்பர் ஸ்டார் என நிரூபித்த நயன்தாரா.. ‘ஜவான்’ படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய விருது..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த சில ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த படங்கள் தோல்வி அடைந்த நிலையில் அவர் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தகுதியானவர் தானா என்ற கேள்வி எழுப்பப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்த படமாக இருந்தாலும் சரி, நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நயன்தாரா நடித்த படமாக இருந்தாலும் சரி வரிசையாக தோல்வி அடைந்த நிலையில் அவருக்கு தற்போது கைவசம் படங்கள் குறைந்து விட்டதாகவும் கூறப்பட்டது.



இந்த நிலையில் சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ’ஜவான்’ என்ற திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருந்த நிலையில் அந்த படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சூப்பர் ஹிட் ஆகியது.

இந்த நிலையில் ’ஜவான்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நயன்தாராவுக்கு தாதா சாகேப்  சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. இந்த விருது கிடைத்தது குறித்து நயன்தாரா தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்த நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு அவர் பொருத்தமானவர் என்பதை இந்த விருதின் மூலம் நிரூபித்து விட்டார் என ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement