சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, விஜயா கோவிலில எல்லாருக்கும் சாப்பாடு கொடுக்கும் போது முத்துவும் அவர்களோட இருக்கிறார். அதைப் பார்த்த விஜயா ஷாக் ஆகுறார். பின் முத்து உங்க கையால எப்ப சாப்பிட்டன் என்று எனக்குத் தெரியல அதுதான் இதில வந்து இருந்தனான் என்கிறார். இதனை அடுத்து முத்து விஜயா கையால சாப்பாட்டை வாங்கி அழுதுகொண்டு சாப்பிடுறார்.
பின் முத்து பார்வதியைப் பார்த்து வாழ்க்கையில முதல் தடவையா சந்தோஷமான விஷயத்தை அனுபவிக்கிறேன் என்று சொல்லுறார். அதனை அடுத்து பார்வதி விஜயா கிட்ட உன்னோட கையால ஒரு தடவை சாப்பிட்டதற்கே முத்து எவ்வளவு சந்தோசப்படுறான் என்று பார்த்தியா எனக் கேட்கிறார். மேலும் முத்துவை பார்க்கும் போது எனக்கே அழுக வந்திட்டு என்று சொல்லுறார்.
பின் விஜயா முத்துவுக்கு சாப்பாடு போட்ட வீடியோவை உடனே அழிச்சு விடு என்று சொல்லுறார். இதனை அடுத்து முத்து வீட்ட வந்து எல்லாருகிட்டயும் விஜயா கையால சாப்பிட்டனான் என்று சொல்லுறார். அதைக் கேட்ட உடனே வீட்டில இருக்கிற எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். இதனை அடுத்து கிரிஷ் ஹாஸ்பிடல் போய் நான் மீனா ஆன்ட்டி கூடவே இருக்கிறன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட கிரிஷோட பாட்டி உன்ட அம்மா பேசுவாள் என்று சொல்லுறார்.
இதனை அடுத்து மீனா கிரிஷோட பாட்டியையும் தங்கட வீட்ட கொஞ்ச நாள் வந்து இருக்கச் சொல்லுறார். அதைக் கேட்ட உடனே பாட்டி தன்ர பொண்ணுகிட்ட கேட்டுட்டு சொல்லுறேன் என்கிறார். பின் ரோகிணி அங்க போய் விஜயா வீட்ட எல்லாம் வரமுடியாது என்று சொல்லு என்கிறார். அதைக் கேட்ட ரோகிணியோட அம்மா, கிரிஷ் உன்ட மகன் தான் என்ற உண்மையை வீட்டில இருக்கிற எல்லாருக்கும் சொல்லு என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!