• Apr 16 2026

மீனாவிடம் சிக்கிய கூட்டுக் களவாணிகள்.! அடிதடியில் முடிந்த சமாதான பேச்சு..

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் , கந்து வட்டிக்காரரிடம் மனோஜூம் விஜயாவும் தங்களுடைய வீட்டு பத்திரத்தை அடகு வைத்து பணம் வாங்கிக் கொள்கின்றார்கள். இதன் போது அங்கு மின்சாரம் தடைபடவும் அதை அபசகுணமாக எண்ணுகின்றார்கள். ஆனாலும் சிந்தாமணி அவர்களை சமாதானம் செய்து கையெழுத்து போட வைக்கின்றார்.

அவர்கள் மூவரும் வெளியே வரும்போது மீனா அவர்களை பார்த்து விடுகின்றார். மேலும், இந்த இடத்தில் இவர்களுக்கு என்ன வேலை என சந்தேகம் கொள்ளுகின்றார். அதற்கு பின்பு மனோஜூம் விஜயாவும் சிந்தாமணியின் காரில் எரி சென்று விடுகின்றனர்.

இன்னொரு பக்கம் நீத்து ரவிக்கு கால் பண்ணி தன்னைப் பார்க்க வருமாறு கூப்பிடுகிறார்.  ஆனாலும் தனக்கு வேலை இருக்கு என்று ரவி கூறவும், இப்போது பார்க்க வரவில்லை என்றால் நான் மாத்திரைகளை போட்டு இறந்து விடுவேன் என பிளாக் மெயில் பண்ணுகின்றார். இதனால் ரவியும் பதறி அடித்துக் கொண்டு செல்லுகின்றார்.


இதை தொடர்ந்து முத்துவும் செல்வமும் அருணுடன் சமரசமாக போவதற்கு வக்கீலை வைத்து கதைக்கின்றனர்.  அருணின் அம்மா மீதும் பிழை இருப்பதால் ஒரு கட்டத்தில் அருண் சமாதானமாக வருகின்றார்.  ஆனாலும் செல்வம் தன்னால் ஒரு லட்சம் தான் கொடுக்க முடியும் என்று கூற அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனால் உனக்கு என்னதான் வேணும் என்று முத்து அவனிடம் கேட்க, நீ உன்னுடைய அப்பாவை நடுரோட்டில் கொண்டு வந்து நிறுத்திவை.. நான் அவர் மீது காரை ஏற்றிக் கொள்கிறேன் என்று சொல்ல,  கோபத்தில் முத்து அவரது ஷர்ட்டை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்.  இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement