• Apr 16 2026

நடன லெஜண்டும் நகைச்சுவை மன்னனும் காதலர் தினத்தில் செய்த காரியம்.. ட்ரெண்டிங் வீடியோ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

'இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்' என ரசிகர்களால் அழைக்கப்படும் பிரபுதேவா, பல தலைமுறை இளைஞர்களுக்கு நடனத்தில் ஒரு முன்னோடியாக இருந்து வருகிறார். அவரது அசத்தலான ஸ்டெப்ஸும், உடல் மொழியும் இன்று வரை ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

அதேபோல், தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்றாலே நினைவுக்கு வருவது வடிவேலு தான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்தவர். அவரது காமெடி காட்சிகள் இன்றளவும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களாக வைரலாகி வருகிறது. 

பிரபுதேவாவும் வடிவேலுவும் ஆரம்ப காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள். காதலன், மிஸ்டர் ரோமியோ, எங்கள் அண்ணா, மனதை திருடிவிட்டாய், ராசய்யா போன்ற படங்களில் இவர்களின் கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நடனமும் நகைச்சுவையும் ஒன்றிணைந்த போது, அந்த காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.


சமீபத்தில் இருவரும் இணைந்து சூரிய நமஸ்காரம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. அதற்கு பிறகும் இருவரும் இணைந்து ஒரு சில வீடியோக்களை வெளியிட்டனர்.

இந்த நிலையில், காதலர் தினமான இன்று பிரபு தேவாவும் வடிவேலும் இணைந்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இவர்களின் நட்பு என்றும் பிரிக்க முடியாதது என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement