• May 25 2025

"ஜெயம்ரவி மாதிரி கட்டிக்கிட்டு மாட்டிக்காதப்பா..!" ஆர்த்தியை கடுப்பேத்திய மன்சூர் அலிகான்

Mathumitha / 5 hours ago

Advertisement

Listen News!

விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில் சட்டப்படி இருவரும் அமைதியை பேண வேண்டும் என்றும் ஊடகங்கள் வழியாக கருத்துக்கள்  தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது அனைவராலும் பேசப்படும் ஒரு விடயம் ரவிமோகன் -கெனிஷா விவகாரம் இவர் விவாகரத்து வழங்க முன்னர் தனது நெருங்கிய நண்பி கெனிஷாவுடன் திருமணத்திற்கு கைகோர்த்து வந்தமை விமர்சனத்தை ஏற்படுத்தி கடந்த இரண்டு வாரமாக சினி உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. 


மேலும் நேற்றைய தினம் விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில் சட்டப்படி இருவரும் அமைதியை பேண வேண்டும் என்றும் ஊடகங்கள் வழியாக கருத்துக்கள்  தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் பின்னர் ரவிமோகன் தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து கெனிஷாவை unfollow செய்து மீண்டும் follow பண்ணியுள்ளார்.


இந்த நிலையில் தற்போது நடிகர் மன்சூர் அலிகான் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள "ராஜபுத்திரன் " திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் மேடையில் பேசும்போது படத்தின் அறிமுக உதவி இயக்குநரை பார்த்து " நல்லா செக்கச்சிவேன்னு அழகாத்தான் இருக்கிறான். நம்ம ஜெயம்ரவி மாதிரி யாரையும் போய் கட்டிக்கிட்டு மாட்டிக்காதப்பா " என கூறியுள்ளார். இதற்கு மேடையில் உள்ள அனைவரும் சிரித்துள்ளனர்.

Advertisement

Advertisement