• Jun 08 2025

மீண்டும் கோமாளியாக மணிமேகலை.. விஜய் டிவி ஏமாற்றிவிட்டதா?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் பத்து குக்குகள் மற்றும் கோமாளிகள் இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் விறுவிறுப்பாக்கி வருகின்றனர். 

இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட், இயக்குனராக இருந்த பார்த்திபன் உள்பட சிலர் விலகிப் போனாலும் இந்த சீசனில் எந்த விதத்திலும் சுவாரஸ்யம் குறையவில்லை என்றும் மற்ற சீசன்கள் போலவே இந்த சீசனிலும் காமெடி மற்றும் கலகலப்பு இருக்கிறது என்றும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து அதன் பின் தொகுப்பாளினியாக பதவி உயர்வு பெற்ற மணிமேகலை சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது திடீரென அவரை மீண்டும் கோமாளி ஆக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சற்றுமுன் வெளியான முன்னோட்ட வீடியோவில் மக்களின் விருப்பப்படியும், எங்களுடைய விருப்பப்படியும் மணிமேகலை மீண்டும் கோமாளி ஆகிறார் என்று செஃப் தாமு அறிவித்த நிலையில் மணிமேகலை சோகமாக இருக்கும் காட்சிகள் அந்த முன்னோட்ட வீடியோவில் உள்ளன. 

இதனை அடுத்து மணிமேகலையை விஜய் டிவி ஏமாற்றி விட்டதாக கூறப்படும் நிலையில் தொகுப்பாளனியை விட கோமாளியில் தான் அவர் சிறப்பாக செயல்பட முடியும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



Advertisement

Advertisement