• May 18 2025

சன்னி லியோனை போட்டியாளராக நினைக்கும் மாளவிகா மோகனன்.. பாலிவுட்டையே கதற வைக்கும் சம்பவம்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை மாளவிகா மோகனன் தற்போது ’யுத்ரா’ என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த படத்தை அவர் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கிறார் என்றும் அந்த படம் மட்டும் ஹிட் ஆனால் தனக்கு பாலிவுட்டில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று கனவில் மிதந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்குப் பிறகு அவர் பாலிவுட் படங்களில் வாய்ப்புகள் கிடைத்தால் மும்பையில் செட்டில் ஆகிவிடலாம் என்று அவர் கனவு காண்பதாகவும் அதற்காக அவர் சர்ச்சைக்குரிய கேரக்டர்களில் நடிக்கக்கூட தயார் என்று சில பாலிவுட் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் கூறியிருப்பதாகவும் தெரிகிறது.

பாலிவுட்டில் என்ட்ரி ஆகும் போது சன்னிலியோன் இப்படித்தான் சர்ச்சைக்குரிய கதைகளில் நடிப்பது தயார் என்று கூறி ஒரு ரவுண்டு வந்தது போல் சன்னிலியோனை தனது போட்டியாளராக கருதி தற்போது மாளவிகா மோகனன் இது போல் செய்து கொண்டிருப்பதாக பாலிவுட் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

பாலிவுட்டில் மிகப்பெரிய நடிகையாகி பெரிய அளவில் சம்பளம், ராஜமரியாதை, பிசினஸ் நெட்வொர்க் என அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் அதனால் தான் பாலிவுட் கதைகளை கேட்டு வருவதாகவும் பாலிவுட்டின் பிரபல இயக்குனர்களுக்கு கவனத்தையும் அவர் திருப்பி வருவதாகவும் கூறப்படுகிறது

சர்ச்சைக்குரிய கதைகளுக்கு முக்கியத்துவம் என்று அவர் கூறியதை அடுத்து எந்த லெவலுக்கும் அவர் இறங்கி அடிக்க தயாராக இருப்பது போல் கூறியிருப்பது பாலிவுட்டில் பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது.

Advertisement

Advertisement