• Apr 17 2026

நடிகை மகாலட்சுமி பிறந்த நாள்.. நள்ளிரவில் கணவர் ரவீந்தர் கொடுத்த சர்ப்ரைஸ்.. வைரல் புகைப்படங்கள்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

சீரியல் நடிகை மகாலட்சுமி தனது பிறந்த நாளை சிறப்பாக தனது கணவர்  ரவீந்தர்   மற்றும் மகனுடன் கொண்டாடிய நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

சீரியல் நடிகை மகாலட்சுமி கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணம் குறித்த சர்ச்சைக்குரிய செய்திகள் வந்தாலும் இருவரும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மகாலட்சுமி தனது பிறந்த நாளை இன்று கொண்டாடிய நிலையில் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் நள்ளிரவில் அவரது கணவர் ரவீந்திரன் ஸ்பெஷல் கேக் வரவழைத்து தனது மனைவியை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.  இதனை அடுத்து கணவர் ரவீந்திரனுக்கு மகாலட்சுமி கேக் ஊட்டும் புகைப்படம், ரவீந்தர் தனது மனைவிக்கு கேக் ஊட்டும் புகைப்படம், இந்த கொண்டாட்டத்தில் மகாலட்சுமியின் மகன் கலந்து கொண்டது, பிரியாணி உட்பட செம சாப்பாடு அனைவரும் சாப்பிடுவது உள்ளிட்ட புகைப்படங்களை மகாலட்சுமி பதிவு செய்துள்ளார்.

மேலும் தனது அம்மா மற்றும் சகோதரன் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த பிறந்த நாளில் அம்மா மற்றும் சகோதரன் என்னை மன வளர்ச்சி குறைந்த குழந்தைகள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர் என்பதும் அவர்கள் முன் கேக் வெட்டி கொண்டாடியது மனதுக்கு திருப்தி அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பிறந்த நாளில் நான் அனைவருக்கும் கொடுக்கும் சிறப்பு பரிசு என்னவெனில் நான் உடல் தானம் செய்து உள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement