• Apr 18 2026

’குட் பேட் அக்லி’ படத்தில் விஜய் அப்பா தான் வில்லனா? தரமான சம்பவம் இருக்குது..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!


அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’குட் பேட் அக்லி’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை ஆதிக் ரவிச்சந்திரன் தொடங்கிவிட்டார் என்பதும் குறிப்பாக இந்த படத்தின் நடிக்கும் நட்சத்திரங்களை தேர்வு செய்யும் பணியில் அவர் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித் ஜோடியாக நடிக்க மூன்று முன்னணி நடிகைகளை அவர் தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் இந்த படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடிப்பது இதிலிருந்து உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில் தான் அடுத்த கட்டமாக இந்த படத்தின் வில்லன் தேர்வு பணி முடிந்து விட்டதாகவும் அவர்தான் சஞ்சய் தத் என்றும் கூறப்படுகிறது. சஞ்சய் தத் ஏற்கனவே தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படத்தில் அவருடைய அப்பாவாக நடித்த நிலையில் அடுத்ததாக அஜித் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என்பதும் அவரது என்ட்ரி இந்த படத்தின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்று உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அஜித் மற்றும் சஞ்சய் தத் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அஜித் படத்தில் வில்லனாக நடிக்க அவர் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் இதற்காக அவருக்கு ஒரு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 அஜித், சஞ்சய் தத் இணைந்து நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் யார் யாரெல்லாம் இந்த படத்தில் இணைவார்கள்? இந்த படம் எந்த அளவுக்கு பெரிய பட்ஜெட் படமாக மாற உள்ளது என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement