ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்துள்ள மிகக் கவனம் ஈர்க்கும் திரைப்படம் 'வார் 2', இயக்குநர் அயன் முகர்ஜியின் இயக்கத்தில், யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் இப்படத்தின் டிரெய்லரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியாகிய 'ஜனாப் இ ஆலி' பாடல் டீசரில் அவர் பிகினி உடையில் கவர்ச்சி அவதாரத்தில் தோன்றியதை தொடர்ந்து, அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின. ஆனால், இக் காட்சிகள் தொடர்பாக சில அமைப்புகளின் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, தணிக்கை குழு (CBFC) படம் மீது சில மாற்றங்களை அறிவித்துள்ளது.
இதன்படி, கியாரா அத்வானி நடித்த 9 வினாடிகளுக்கான பிகினி காட்சிகள் முற்றிலும் படம் முழுவதிலும் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதனால் படம் தற்போது ஹிந்தி மொழியில் 2 மணி நேரம் 53 நிமிடங்கள், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 2 மணி நேரம் 51 நிமிடங்களாக முடிவடைந்துள்ளது. யு/ஏ சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
Listen News!