தென்னிந்திய திரையுலகில் தனது அழகு, நடிப்பு திறமை மற்றும் நடனத்தால் ரசிகர்களை மெய்மறக்க வைத்திருக்கும் முன்னணி நடிகை தமன்னா, இப்போது இலங்கை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர், ஒரு சிறப்பு விளம்பர படப்பிடிப்பில் பங்கேற்கும் நோக்கில் இலங்கை செல்லவுள்ளார் என்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.
தமன்னா பங்கேற்கும் இந்த விளம்பரப் படம் அனுராதபுரம் பகுதியில் நடைபெற உள்ளது. இந்த இடம், வரலாற்று சிறப்புமிக்க இடங்களாலும் இயற்கை அழகாலும் புகழ்பெற்றது. அத்தகைய இடத்தை மேலும் அழகு சேர்க்கும் வகையிலேயே தமன்னாவின் வருகை அமையவுள்ளது.
அத்துடன் தமன்னா கடந்த வருடமும் இலங்கைக்கு சென்றிருந்தார். அப்போது அவர் நிகழ்வில் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்பொழுது, தமன்னாவின் வருகை பற்றிய தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதிலிருந்து, இலங்கையில் உள்ள அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Listen News!