தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்திசுரேஷ் அண்மையில் ஆண்டனி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 13 வருட காதலரை கடந்த ஆண்டு கைபிடித்த இவர் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார். தமிழில் பெரிதும் படவாய்ப்புகள் இல்லாமையினால் தெறி பட ஹிந்தி ரீமேக் படமான "பேபி ஜான் " படத்தில் நடித்தார். படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வியடைந்தது.
மேலும் இவர் இன்னொரு ஹிந்தி படத்தில் நடிப்பதற்காக கமிட்டாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இவர் தனது கணவருடன் மாலைதீவு சென்றுள்ளார். மேலும் இவர் தற்போது அழகிய மயில் நிற ஆடையுடன் போட்டோசூட் நடத்தியுள்ளார்.
இதன்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அழகிய புகைப்படங்கள் இதோ...
Listen News!