• May 16 2026

பா ரஞ்சித் கைவிட்டாலும் கார்த்திக் சுப்புராஜ் கைவிடவில்லை.. ‘சூர்யா 44’ இசையமைப்பாளர் அறிவிப்பு..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பா.ரஞ்சித் படங்களில் தொடர்ச்சியாக சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வந்த நிலையில் சமீப காலமாக பா.ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால்தான் அவரது இயக்கத்தில் உருவான ’தங்கலான்’ படத்திற்கு கூட ஜிவி பிரகாஷ் இசையமைத்தார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பா ரஞ்சித் தனது ஆரம்பகால நண்பர் சந்தோஷ் நாராயணனை மறந்தாலும் கார்த்திக் சுப்புராஜ் மறக்கவில்லை என்றும் அவர் தொடர்ச்சியாக சந்தோஷ் நாராயணனுக்கு தனது படங்களில் இசையமைக்க வாய்ப்பளித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக சூர்யா நடிக்கும் படத்தை இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என்று சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து  சூர்யா   44’ படத்தில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகிய கூட்டணி இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் நாயகி ஆக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சூர்யா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ’ஏழாம் அறிவு’ என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் மீண்டும் இணைய உள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரம் அந்தமான் தீவில் தொடங்க இருப்பதாகவும் 40 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.



Advertisement

Advertisement