• Apr 17 2026

’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கார்த்தி ? வைரல் புகைப்படம்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!


நடிகர் கார்த்தி திடீரெனபாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்ற நிலையில் அது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் தற்போது இரண்டாவது சீசனுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில்பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் தற்போது சென்னை அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் நிலையில் அதன் அருகில் தான் கார்த்தி நடித்து வரும்வா வாத்தியாரேஎன்ற படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.

 
படப்பிடிப்பின் இடையில்பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் படப்பிடிப்பு பக்கத்தில் தான் நடக்கிறது என்பதை அறிந்த கார்த்தி அந்த தளத்துக்கு சென்றதாகவும் அவரை பார்த்துபாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் குழுவினர் ஆச்சரியமடைந்து அவருடன் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது.

இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கார்த்தி கெஸ்ட் ரோலில் நடிப்பதாக திடீரென வதந்தியை கிளப்பிவிட்ட நிலையில் இது குறித்து கார்த்தி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஈவிபி பிலிம் சிட்டியில்பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் படப்பிடிப்பு நடந்ததால் அங்கு மரியாதை நிமித்தமாக சென்றதாகவும் அங்கு உள்ள குழுவினர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் மற்றபடி அந்த சீரியலில் தான் நடிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

ஏற்கனவே இதே இடத்தில் தான் ஜெயம் ரவி நடித்து வரும்ஜெனிஎன்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஜெயம் ரவி மற்றும் கார்த்திக் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் சமீபத்தில் இணையத்தில் வைரல் ஆனது என்பதை பார்த்தோம்.

 

Advertisement

Advertisement