• Apr 17 2026

மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய ‘கங்குவா’ டீம்.. அட இதை எதிர்பார்க்கவே இல்லையே..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வந்த ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது என்பதும் சூர்யாவின் டப்பிங் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் மற்ற நட்சத்திரங்களின் டப்பிங் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் ஒரு பக்கம் டப்பிங் பணிகள் நடந்தாலும் இன்னொரு பக்கம் கிராபிக்ஸ் காட்சிகளின் பணி நடந்து கொண்டிருப்பதாகவும் இதனை அடுத்து எடிட்டிங், பின்னணி இசை உள்ளிட்ட பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்ட நிலையில் திடீரென கடந்த இரண்டு நாட்கள் ஆக மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரித்தபோது ‘கங்குவா’ படத்தின் இறுதியில் அடுத்த பாகத்திற்கான லீட் இருப்பதாகவும் அடுத்த பாகத்திற்கான முன்னோட்ட காட்சிகள் தான் தற்போது படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே இதிலிருந்து  ‘கங்குவா’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ‘கங்குவா’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகும் என்று தகவல் சூர்யா ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் அனைத்தையும் முடித்து, ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதை நோக்கி பணிகளும் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது

Advertisement

Advertisement