• Apr 16 2026

'கோட்' ஷூட்டிங் சென்ற இடத்தில் சாய் பாபாவை பக்தியுடன் தரிசித்த ஜோசப் விஜய்!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் நாட்டில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கதில் 'கோட்' படத்தில் நடித்து வருகின்றார். சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் ஒரு கட்சியையும் ஆரம்பித்துள்ளார். 

கடந்த ஓராண்டாகவே களப்பணியில் கவனம் செலுத்தி வந்த விஜய், அதற்காக மக்களை நேரில் சந்தித்து நிவாரணங்களையும், இளம் மாணவர்களை சந்தித்து கல்விக்கு ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகளையும் செய்து வந்தார்.

இறுதியில் நடிகர் விஜய் அரசியலில் வருவது உறுதியாக, அவரும் அவ்வாறே தனது கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் வைத்து அரசியலில் நுழைந்தார்.


இதைத்தொடர்ந்து கட்சியின் உறுப்பினர் சேர்க்கை செயலி  அறிவிப்பு, கொடி அறிவிப்பு, மாவட்ட நிர்வாகிகளுக்கு இடையே பொறுப்பு அறிவிப்பு என அடுத்தடுத்து கட்சி  தொடர்பில் அதிரடி காட்டினார்.

இந்த நிலையில், கோட் பட ஷூட்டிங் சென்ற இளைய தளபதி விஜய், சாய் பாபா கோவிலிலை தரிசனம் செய்துள்ளார்.

தற்போது இது தொடர்பிலான புகைப்படம் வைரலாகி வருகின்றன. 


Advertisement

Advertisement