• Apr 16 2026

விடாமுயற்சி திரைப்படத்தின் கதை இது தானா?- திடீரென லீக்கான தகவல்- இது தான் டுவிஸ்டா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் நடிப்பில் இறுதியாக வெளியாகிய துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து இயக்குநர்  மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்னும் திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.இப்படத்தில் அஜித்துடன் நடிக்க த்ரிஷா, அர்ஜூன் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர். 

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து  முடிந்தது.அதை முடித்துக் கொண்டு சென்னை வந்த அஜித் 10 நாள்களுக்கு பிறகு மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக அஜர்பைஜானுக்கு சென்றிருக்கிறார்.கூடவே த்ரிஷாவும் , அர்ஜூனும் சென்றிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகின்றது.


படத்திற்கு அனிரூத் இசைமைக்கவுள்ளார்.அதாவது கணவன் மனைவியாக நடிக்கும் அஜித்தும் த்ரிஷாவும் ஒரு ட்ரிப்பிற்காக வெளியூர் செல்கிறார்களாம்.அங்கு த்ரிஷா காணாமல் போய்விடுகிறார்களாம். 

துரதிர்ஷ்டவசமாக த்ரிஷா வில்லன் குரூப்பில் சிக்கிவிட மனைவியை தேடும் போது ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வதுதான் இந்தப் படத்தின் கதை எனகோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement