• May 24 2025

காலில் சிக்கல்.! வீட்டில் ஒரே பிரச்சனை..கார்த்திக்கின் Real வாழ்க்கை இது தானா.?

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் திறமையான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர் நடிகர் கார்த்திக் . சமீபகாலமாக அவர் தொடர்பான வதந்திகளும், உடல்நிலை குறித்த சந்தேகங்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இதற்கிடையே பிரபல சினிமா விமர்சகர் திரு.சபிதா ஜோசப், சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் கார்த்திக் பற்றிய பல முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.


இந்த பேட்டியின் முக்கியமான பகுதிகள், கார்த்திக்கின் வாழ்க்கையின் பல மறைமுகங்களை வெளிக்கொண்டு வந்துள்ளன. பேட்டியின் போது நடுவர்,“கார்த்திக் சமீப காலமாக சினிமாவில் குறைவாகவே வருகின்றார். அவருடைய உடல்நிலை சரியில்லையா?” என்று கேட்டிருந்தார். 

இதற்கு சபிதா ஜோசப் பதிலளிக்கும்போது, “அவருக்குக் காலில் ஓர் சிக்கல் இருந்தது. அதற்காக ஒரு சிறிய surgery நடந்தது. அதன்பின் hospital போய் physiotherapy எடுத்து இப்போதுஅவருடைய உடல்நிலை மிகவும் நல்லதாக தான் இருக்கிறது. புகைப்படங்களைப் பார்த்தா தெரியும், நலமாகிவிட்டார்." என்று கூறினார்.


இதனால், கார்த்தியின் உடல்நிலை குறித்து வெளியான வதந்திகள் அனைத்தும் பொய்யானவை என்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து பேட்டியில், சபிதா ஜோசப் இன்னொரு முக்கியமான தகவலையும்  வெளியிட்டார். அதுஎன்னவென்றால், “கார்த்திக் வீட்டில் அப்பா வழி சொத்தில் ஏதோ ஒரு சிக்கல் இருக்கின்றது. இது, கார்த்திக்கின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு பிரச்சனையாக இருக்கக்கூடும்." என்றும், தெரிவித்தார். இந்தக் கருத்துக்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வெகுவாகப் பரவி வருகின்றது.

Advertisement

Advertisement