• Apr 26 2025

பிரசாந்துடன் டச்சில இருக்கும் பிரபல நடிகை..!யாரும் அறிந்திடாத சுவாரஸ்யமான தகவல்..!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஒரு அழகி என்றால் அது நடிகை கிரண். அவரது அழகு , நடிப்பு , நடனம் மற்றும் கவர்ச்சியான தோற்றம் ரசிகர்களிடம் சிறப்பான இடத்தைப் பெறவைத்தது. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் கிரண், சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தனது பழைய நினைவுகளை மீட்டெடுத்துள்ளார்.


இந்த நேர்காணலில், தனக்குப் பிடித்த நடிகரைப் பற்றியும் அவர் நடித்த திரைப்பட அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். கிரணிடம், "நீங்கள் சந்தித்த நடிகர்களில் யாருடன் சிறந்த அனுபவம் இருந்தது?" என்ற கேள்வியை நடுவர் கேட்டிருந்தார். 

அதற்கு மிகுந்த சந்தோஷத்துடன் கிரண் பதிலளிதுள்ளார். அவர் கூறியதாவது, "நான் நடிச்ச நடிகர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் பிரசாந்த். அவர் ஒரு நல்ல மனிதர் என்றதுடன் எப்பொழுதும் மரியாதையுடன் நடந்துகொள்வார்." எனக் கூறியுள்ளார்.


கிரண் மேலும், "பிரசாந்துடன் நடித்த காட்சிகள் எல்லாம் எனக்கு இன்னும் இனிமையான நினைவுகளாகவே இருக்கின்றன. ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட அவர் எப்போதும் சிரித்த முகத்துடன் தான் இருப்பார் என்றதுடன் நான் இப்பவும் அவர் கூட டச்சில இருக்கின்றேன்" எனவும் கூறியுள்ளார்.

கிரண் மற்றும் பிரசாந்த் இணைந்து நடித்த சில திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. மேலும் கிரணின் இந்த நேர்காணல் இணையத்தில் வெளிவந்ததும், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அதைப் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement