• Apr 27 2025

அல்லு அர்ஜுன் - அட்லி கூட்டணியை வீடியோ மூலம் வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா உலகம் தற்போது ஒரு பெரிய பரபரப்பில் மூழ்கியுள்ளது. சமீபத்தில் 'புஷ்பா 2' படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ள அல்லு அர்ஜுன், தற்போது தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் அட்லியுடன் கைகோர்க்கவுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. தெலுங்கில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் அல்லு அர்ஜுனின் புகழ் இப்படத்தின் மூலம் மேலே உயர்ந்தது. இந்த வெற்றியின் பின் அவர் அடுத்த படத்திற்காக மிகவும் கவனமாக இயக்குநரை தேர்ந்தெடுத்துள்ளார்.


அந்தவகையில் அட்லி தற்போதைய இந்திய திரையுலகில் மிகப்பெரிய ஹிட் இயக்குநராக காணப்படுகின்றார். அட்லி ராஜா ராணி , தெறி, மெர்சல் மற்றும் பிகில் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர். அத்தகைய இயக்குநர் சமீபத்தில் 'ஜவான்' படத்தின் மூலம் ஷாருக்கான் உடன் இணைந்து உலகளாவிய அளவில் மாபெரும் வெற்றியை பெற்றவர்.

இந்த புதிய படம், அல்லு அர்ஜுன் மற்றும் அட்லி இருவரும் இணையும் முதல் படம் ஆகும். இதனால், ரசிகர்களிடையே மிகுந்த ஆவல் காணப்படுகின்றது. இதை மேலும் சிறப்பாக மாற்றும் தகவல் என்னவென்றால், இப்படத்தை பிரமாண்டமாக 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது.


சன் பிக்சர்ஸ் தமிழில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் பிரமாண்டமான நிறுவனமாக காணப்படுகின்றது. பேட்ட , மாஸ்டர் மற்றும் ஜெயிலர் உள்ளிட்ட ஹிட் படங்களை வழங்கிய நிறுவனம் இப்பொழுது அல்லு அர்ஜுனை வைத்து படம் தயாரிக்க இருப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை இப்படம் தொடர்பாக எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் இன்று, அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வீடியோவை ஒன்றினை வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்களும் இந்த கூட்டணியை பாராட்டி வருகின்றனர்.




Advertisement

Advertisement