• Apr 17 2026

மீண்டும் தொடங்கிய ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு.. இதுக்கு ஒரு முடிவே இல்லையா?

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக ஏற்கனவே செய்தி வெளியானது என்பதும் தற்போது ’இந்தியன் 3’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தான் நடந்து வருவதாக கூறப்பட்டது.  ஆனால் தற்போது வந்துள்ள தகவலின் படி ’இந்தியன் 2’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடலின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

’இந்தியன் 2’ படத்தில் கமலஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டாலும் சித்தார்த் மற்றும் ப்ரியா பவானி சங்கர் பாடல் ஒன்று படமாக்கப்பட இருப்பதாகவும் அதற்கான செட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.



‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ’இந்தியன் 3’ படப்பிடிப்பு தான் நடந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதாக செய்தி வெளியானதால் ‘இதற்கு ஒரு முடிவே இல்லையா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

’இந்தியன் 2’ படத்திற்காக படமாக்கப்பட்ட காட்சிகள் அதிகமாக இருந்ததால் தான் ’இந்தியன் 3’ படமாக உருவாக்கிவிட்டதாகவும், ஆனால் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை இரண்டு படத்திற்கு பிரிக்கப்பட்ட போது ’இந்தியன் 2’ படத்தின் காட்சிகள் குறைவாக இருப்பதாக கருதியதால்தான் அதில் சில காட்சிகளை சேர்க்கும் வகையில் தற்போது ஒரு பாடல் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில் ’இந்தியன் 2’ படத்தை எப்போதுதான் ஷங்கர் ரிலீஸ் செய்வார் என்று ஆதங்கத்துடன் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Advertisement