• Apr 18 2026

பயந்துட்டே இருந்தா புதுசா ஒன்னும் பண்ண முடியாது.! மனம் வருந்திய கார்த்திக்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கார்த்திக்.   அந்தப் படத்தில் அவருடைய நடிப்பை அசால்டாக வெளிபடுத்தி இருந்தார் கார்த்திக்.  அதற்கு முக்கிய காரணம் அந்த படத்தின் இயக்குனரான அமீர். 

இந்த படம் கார்த்திக்கு வெற்றி படமாக அமைந்தது. மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது. ஆனாலும் அதனை அனுபவிக்க முடியவில்லை என்று அமீர் சமீபத்திய  பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.  அதற்கு முக்கிய காரணம் அவர்களுடைய குடும்ப பிரச்சினை தான். 

 எனினும்  அந்தப் பிரச்சினைகள் எல்லாம் ஒரு முடிவிற்கு வந்ததாக தெரிகின்றது. ஏனென்றால் கார்த்திக், அமீர் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் ஒன்று வெளியானது. இந்த தகவல் ரசிகர்களை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களையும் குஷியாக்கி இருக்கின்றது.


இன்னொரு பக்கம்  நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள வா வாத்தியார் திரைப்படம்  வெளியீட்டுக்கு தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.  மேலும் இந்த படம் எதிர்வரும் 18 ஆம் தேதி வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நடிகர் கார்த்திக் அளித்த பேட்டி வைரலாகி வருகின்றது. அதில் தெலுங்கு பெரிய படங்களை தயாரிக்கின்றார்கள். மலையாளம் வித்தியாசமான படங்களை தயாரிக்கின்றார்கள்.  ஆனால் நாம் வித்தியாசமாக என்ன பண்ணுகின்றோம்? சாதாரணமான படங்களை பண்ணிக் கொண்டிருந்தால் பயனே இல்லை. பயந்து கொண்டே இருந்தால் புது விஷயங்களை பண்ண முடியாது என்று தெரிவித்துள்ளார். 




 

Advertisement

Advertisement