தெலுங்கு சினிமா உலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட முக்கிய நடிகர்களில் ஒருவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. ‘பாலையா’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர், ஆக்ஷன், மாஸ், பவர் நிறைந்த கதாபாத்திரங்களால் பல ஆண்டுகளாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில், இயக்குநர் போயாபட்டி ஸ்ரீனு – பாலகிருஷ்ணா கூட்டணியில் உருவான திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வழக்கம்.
2001ஆம் ஆண்டு இந்த கூட்டணியில் வெளியான ‘அகண்டா’ திரைப்படம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பாலையா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆன்மீகமும் ஆக்ஷனும் கலந்த கதைக்களம், பாலகிருஷ்ணாவின் இரட்டை வேட நடிப்பு, சக்திவாய்ந்த வசனங்கள், மாஸ் காட்சிகள் என அனைத்தும் இணைந்து இப்படத்தை ஒரு மெகா ஹிட் படமாக மாற்றியது. பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் வசூல் சாதனை படைத்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு பதிலளிக்கும் வகையில் ‘அகண்டா 2’ திரைப்படம் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது. முதல் பாகத்தைப் போலவே, இரண்டாம் பாகத்தையும் போயாபட்டி ஸ்ரீனுவே இயக்கியுள்ளார். இதனால் படம் வெளியாவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு உருவானது.
‘அகண்டா 2’ திரைப்படத்தில் பாலகிருஷ்ணாவுடன், ஹர்சாலி மல்கோத்ரா, நடிகை சம்யுக்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தில் நடிகர் ஆதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது நடிப்பு ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், படம் வெளியாகி மூன்று நாட்களே ஆன நிலையில், ‘அகண்டா 2’ பாக்ஸ் ஆபிஸில் அதிரடி வசூலை குவித்து வருகிறது. தற்போதைய தகவலின்படி, மூன்று நாட்களில் இப்படம் 60 கோடி ரூபாயைத் தாண்டி வசூல் செய்துள்ளது. குறிப்பாக, மூன்றாவது நாளில் மட்டும் 15 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Listen News!