தமிழ் திரையுலகின் மூத்த நடிகரும், தேசிய விருது பெற்ற கலைஞருமான சரத்குமார், சமீபத்தில் நடைபெற்ற ‘கொம்புசீவி’ திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, திரையுலகின் தற்போதைய நிலை குறித்து முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி குறுகிய காலத்திலேயே ஓடிடி தளங்களில் வெளிவரும் நடைமுறை குறித்து அவர் வெளிப்படையாக பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், “ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி குறைந்தபட்சம் 50 நாட்கள் கழித்தே ஓடிடி தளங்களில் வெளியிடப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து, திரையுலக வட்டாரத்திலும், திரையரங்க உரிமையாளர்களிடையிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், திரைப்படங்கள் வெளியான சில வாரங்களிலேயே ஓடிடியில் வெளியாகும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால் திரையரங்குகளின் வருமானம் பாதிக்கப்படுவதாகவும், தியேட்டர்களில் சினிமா பார்க்கும் கலாச்சாரம் மாறிவருவதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் சரத்குமாரின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Listen News!