• Aug 13 2025

இளையராஜா பேரன் என்றால் சும்மாவா.! முதல் பாட்டிலேயே மாஸ் காட்டிட்டாரு..

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

இசைப்புயல் இளையராஜாவின் வழியில் இசைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார் அவரது பேரனான யத்தீஷ்வர் ராஜா. இவர் இன்று தனது முதலாவது பக்தி இசைத்தொகுப்பை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்தப் பாடல் இசை உலகத்தினரிடையே மட்டுமல்லாமல், ஆன்மீகத்தை நேசிக்கின்றோர் மத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த பக்திப் பாடல் வெளியீடு திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற ரமணாசிரமத்தில் இன்று நடைபெற்றது. ஆன்மீக உள்ளங்கொண்ட சூழலில், பக்தியும் இசையும் ஒன்றாக கலந்து வெளியான இந்த நிகழ்வில், யத்தீஷ்வர் ராஜாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் பாராட்டுக் கிடைத்தது.

இந்த பக்திப் பாடல் 6 நிமிடங்கள் கொண்டது. ஆனால், அந்த 6 நிமிடங்கள் ஒரு ரசிகனின் உள்ளத்தைக் குளிர்விக்கும் வகையில் அமைந்துள்ளன. பாடலை எழுதி, இசையமைத்து, பாடியிருக்கிறார் யத்தீஷ்வர் ராஜா. இது அவரது முழுமையான இசைத் திறமையின் வெளிப்பாடாக பார்க்கப்படுகின்றது.


இளையராஜா என்ற இசைத்தெய்வத்தின் பேரனாகப் பிறந்த யத்தீஷ்வர், தந்தை கார்த்திக் ராஜாவிடமிருந்து இசை மரபை பெற்றுக் கொண்டுள்ளார். ஆனால், அவர் தனது தனிப்பட்ட பாதையினை அமைத்துக் கொள்வதற்கான முயற்சியில் இந்த பக்திப் பாடல் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.


Advertisement

Advertisement